இலங்கையில் புத்தர்சிலை உடைத்ததாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மரணம்
கடந்த சில வாரங்களுக்கு முன் குளியாபிட்டிய பகுதியில் உள்ள புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு இருந்த நபர் வாரியபொல விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு மூச்சுவிட ஏற்பட்ட சிரமம் காரணமாக குறித்த நபர் வாரியப்போல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார் என குறித்த சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
45 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் வாரியபொல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments