இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 90 ஆயிரத்து 21பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 699 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579ஆக அதிகரித்துள்ளது
No comments