Header Ads

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்கள்- அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை


வடக்கு மாகாணத்தில் புதிதாக மேலும் 8பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,  புதிதாக யாழ்ப்பாணத்தில் 5பேருக்கும்  வவுனியாவில் ஒருவருக்கும் மன்னாரில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள ஆய்வுகூடத்தில், 417 பேருடைய மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதிலேயே 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேருக்கும் மன்னார்- பள்ளிமுனை கிராமத்தில்  இரண்டு பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.