சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து
சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குறித்த நிதி பங்களிப்பு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையின் ஒரு பகுதியாக குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே கடந்த ஆண்டு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்பட்டதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
No comments