அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை
பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பரவிய சில புகைப்படங்களை அடுத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சித்திரை புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிவேக நெடுஞ்சாலைகளில் கடுமையான நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
No comments