Header Ads

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை



இஸ்ரேலும் இலங்கையும் நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காணமாக மேற்கொள்ள முடியாமல் இருந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக  தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, மே முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் 2000 முதல் 5000 வரை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரஷ்யாவின் ஏரோஃப்ளோட், ஷார்ஜா முதல் ஏர் அரேபியா, இந்தியாவின் விஸ்டாரா மற்றும் குவைத்தின் ஜசீரா ஆகியவையும் இலங்கையுடன் நேரடி விமான சேவையை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப தனது சுற்றுலா இலக்குகளை அடைவதில்  இலங்கை கவனம் செலுத்தி, வழக்கப்போல மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.