Header Ads

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்


யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.