நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 94 ஆயிரத்து 724ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 91 ஆயிரத்து 456 பேர் மீண்டுள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 673 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
No comments