புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது, மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து படுகாயங்களுக்கு உள்ளான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை 8 வயது சிறுவனின் சகோதரியென தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments