Header Ads

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து


தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் கௌனிகம பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகனங்களுக்கு இடையிலான இடைவௌியைக் கடைப்பிடித்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.