யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கும் சண்டிலிப்பாய், சங்கானை பகுதி மற்றும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நால்வருக்கும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
No comments