தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராகும் ரணில்!
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments