வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!
அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நாளை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments