Header Ads

snapchatனால் வந்த வினை ! பெற்றோர்களே பிள்ளைகளின் பாவனை தொடர்பில் அவதானமாக இருங்கள் !!



snapchatஎன சொல்லப்படுகின்ற சமூகவலைத்தள பாவனை என்பது இளையவர்களிடையே அதிகமாக காணப்படுகின்ற நிலையில், பரிசின் புறநகர் பகுதியான ஆர்ஜொன்தொய் பகுதியில் இது 14 வயது மாணவியொருவரின் உயிரை எடுத்துள்ளது.

ஆர்ஜொன்தொய் பகுதியினை ஊடறத்து செல்கின்ற செய்ன் நதியில், பள்ளிசகபாடிகளால் பாலத்தில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெருத்த கோபத்தை கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இளமவயது பள்ளி மாணவர்கள் பலர், பல்வேறு காரணங்களால் படுகொலைக்கு உள்ளான சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இச்சம்பவமும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலைக்கு உள்ளான மாணவியின் snapchatக்குள் ஊடுருவிய, அவரது அந்தரங்க படங்களை அபகரித்து சமூகவலைத்தளங்களில் பகிர்துள்ள நிலையில், இவர்களுக்கு இடையே முறுகல் நிலை பள்ளியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

மாணவியை ஆற்றில் தள்ளிய செய்தியை தனது தயாருக்கு தெரிவித்து விட்டு, சக மாணவியையும் அழைத்துக் கொண்டு நண்பர் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில், இரவு 2 மணியளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளனர். தயாரும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட மாணவன், படுகொலை செய்யப்பட்ட மாணவியுடன் காதல் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இளமயவயதினரிமையே snapchatனால் இவ்வாறாக ஏற்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் snapchat போன்ற சமூகவலை பாவனை தொடர்பில் விழிப்போடு இருப்பது நன்று.



No comments

Powered by Blogger.