Header Ads

சைபர் தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது மருத்துவமனை !!



ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது மருத்துவமனையொன்று பிரான்சில் சைபர்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
Pyrénées-Atlantiques பிராந்தியத்தில் அமைந்துள்ள Le centre hospitalier d'Oloron-Sainte-Marie மருத்துவமனையே நேற்று திங்கட்கிழமை தாக்குதலுக்கு உள்ளானதோடு, அதன் கணினிவலைப்பின்ன் முழுவதும் முடங்கிப்போயிருந்தது.
ஒரு மாத காலத்துக்கு முன்னர் l'hôpital de Dax மருத்துவமனை சைபர்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மருத்துவமனைகளின் கணினிவலைப்பாதுகாப்புக்கு 1 மில்லியார்ட் யுறோக்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.
இவ்வாறான தாக்குதல்கள் ஊடாக மருத்துவமனைகளின் கணினி வலைப்பின்னலுக்கும் ஊடுருவுவதோடு, அவர்களின் இலக்காக நோயாயளிகளின் தனிநபர் தகவல்களை திருடும் இலக்காக கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.


No comments

Powered by Blogger.