Header Ads

பகுதி நேர உள்ளிருப்பாக, வார இறுதி உள்ளிருப்பு!!

 நீஸ் நகரம் உட்பட Alpes-Maritime இன் மாவட்டங்கிளிற்கும், தங்கேர்க் (Dunkerque) நகரிற்கும், இறுதியாக பாது-கலே பகுதிக்கும் பகுதி நேர உள்ளிருப்பாக, வார இறுதி உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டது.


இது, வெள்ளிக்கிழமை மாலை ஆறு (18h00) மணியிலிருந்து திங்கட் கிழமை காலை அறு மணிவரையான உள்ளிருப்பாகவே அறிவிக்கப்பட்டது. இது இல்-து-பிரான்சிற்கும் ஏற்படும் என்ற நிலையில் இறுதி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.



தற்போது, இந்த வார இறுதி உள்ளிருப்பானது தங்கேர்க்கில் மேலும் 3 வார இறுதிகளிற்கு முதற்கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இங்கு கொரோனத் தொற்றின் பாதிப்பு அதிகமாகவே உள்ளமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இல்-து-பிரான்சின் மாவட்டமான செய்ன்-சன்-துனியில் (93) உள்ளிருப்பு அறிவிக்கப்பட்ட நகரங்களையும் தாண்டிய தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.