Header Ads

பிரான்சிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் கொரோனா கடவுச் சீட்டு

 பிரான்சிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில், கொரோனாத் தடுப்பூசி அத்தாட்சிக் கடவுச் சீட்டு, அல்லது, இலத்திரனியல் அத்தாட்சிப் பத்திரத்தினை (passeport sanitaire) நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த இரண்டு நாடுகளிற்கும் இடையில் பயணிப்பவர்கள் தடையின்றிப் பயணிக்க முடியும் என, இஸ்ரேலின் பிரதமர் பென்யமின் நத்தான்யாகூ தெரிவித்துள்ளார்.



இந்த நடவடிக்கை ஏற்கனவே கிறீசிற்கும், இஸ்ரேலிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பென்யமின் நத்தான்யாகூ தெரிவித்தது ஒரு தலைபட்சமான அவரின் கருத்து என்றும், இதற்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என்றும் எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனாத் தடுப்பு ஊசிக் கடவுச்சீட்டு தொடர்பாக, இரு நாட்டு ஒப்பந்தங்கள் எதனையும் பிரான்ஸ் இஸ்ரேலுடன் செய்யவில்லை எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.                              

No comments

Powered by Blogger.