Header Ads

இல்-து-பிரான்சில் உள்ள அதிதீவிர கொரோனாத் தொற்று -கப்ரியல் அத்தால்

 இன்று நடந்த சுகாதாரப் பாதுகாப்புச் சபையின், ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லவரான கப்ரியல் அத்தால் (Gabriel Attal) ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார்.



ஏற்கனவே உள்ள வார இறுதி ஊரடங்குகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள கப்ரியல் அத்தால், இல்-து-பிரான்சில் உள்ள அதிதீவிர கொரோனாத் தொற்று தொடர்பாக இன்னும் இரு தினங்களில் மீண்டும் ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் முற்றாக நிரம்பி உள்ள, இல்-து-பிரான்சின் தீவிர சிகிச்சைக் கட்டில்கள் சிலவற்றை மீளப்பெறுவதற்காக, இல்-து-பிரான்சில் இருந்தும் கொரோனா தீவிரசிகிச்சை நோயாளிகளை இடம் மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும், கொரோனத் தொற்றின் பரவல் உச்சத்தைத் தொட்டு நிற்கும் நிலையில், இன்று புதன்கிழமை, எமானுவல் மக்ரோன், அவசரச் சுகாதாரப் பாதுகாப்புச் ஆலோசசைன் சபையைக் கூட்டியுள்ளார்.

புதன்கிழமைகளில் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைச் சபையைக் கூட்டுவது, ஒரு கலாச்சாரம் போலவே, எலிசே மாளிகைக்கு ஏற்பட்டவிட்டது. அதன் பின்னர் வியாழக்கிழமைகளில் பிரதமர் சப்பைக் கட்டுக் கட்டவதும் வழமையாகி விட்டது.

கடந்த வாரம் இல்-து-பிரான்சிற்கு வார இறுதிக்கட்டப்பாடுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், பரிசின் நகரபிதா அன் இதால்கோவும், இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரசும் இதனை எதிர்த்திருந்த நிலையில் அரசாங்கம் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு இருந்து.

நேற்று, பிரான்சின் சுகாதாரப் பொது இயக்குநர் ஜெரோம் சொலமொன், இல்-து-பிரான்சிற்கும் பரிசிற்கும் தற்போது உள்ளிருப்பு அவசியம் இல்லை எனத் தெரிவித்தமை, மருத்துவத் துறையினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இல்-து-பிரான்சில் உள்ள 1050 தீவிரசிகிச்சைக் கட்டில்களில், 1032 நேற்றே நிரம்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.