பிரான்சின் நோயாளிகளினை பெல்ஜியம் நோக்கி அனுப்பும் நடவடிக்கை
Hauts-de-France பகுதியில் அதியுச்சக் கொரோனாத் தொற்றினால், மருத்துவமனைகளில் தீவிரசிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் நிலையில், தொடர்ந்தும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் Hauts-de-France இன் பிராந்திய சுகதார நிறுவனம் (ARS), தீவிரசிகிச்சைப் பிரிவின் நோயாளிகளினை பெல்ஜியம் நோக்கி அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
பிரான்சின் எல்லையில் இருக்கும், பெல்ஜியத்தின் வைத்தியசாலைகளிற்கே, இந்த நோயாளிகள் அனுப்பப்பட உள்ளனர்.
ஏற்கனவே எல்லையோர வைத்தியசாலைகள் மத்தியில் நோயாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments