Header Ads

இளம் சிறுமிகள் இருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நால்வர் கைது

 


இளம் சிறுமிகள் இருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
இக்கைது சம்பவம் Saint-Etienne (Loire) நகரில் கடந்த மார்ச் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 13 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை நால்வர் கொண்ட குழு ஒன்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது. 
 
50 வயதுடைய பெண் ஒருவரும், அவரின் 20 வயது மகளும், 46 வயதுடைய ஆண் ஒருவரும் அவரின் 19 வயதுடைய மகளும் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பாலியல் தொழிலுக்கு இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்து, சுகாதாரமற்ற கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் வைத்து பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தியிருந்த நிலையில், குறித்த சிறுமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னரே இத்தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

No comments

Powered by Blogger.