Header Ads

பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல்


 பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 
இச்சம்பவம் இவ்வாரத்தின் திங்கட்கிழமை Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய adjointe de sécurité பெண் அதிகாரி ஒருவர் தனது வேலையை முடித்துக்கொண்டு, சாதாரண உடை அணிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 
 
RER D தொடருந்தில் அவர் பயணித்த நிலையில், இரவு 7 மணி அளவில் அதிகாரியின் இருக்கைக்கு அருகே ஆண் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். சில நிமிடங்களில் அவர் குறித்த பெண் அதிகாரியில் அந்தரங்கப்பகுதியில் தொட்டுள்ளார். வேண்டுமென்றே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி, கைகளை தட்டி விட்ட போதும் அவர் விடாமல் தொடர்ந்தும் துன்புறுத்தியுள்ளார். 
 
தொடருந்து Stade de France நிலையத்தை நெருங்க, குறித்த நபரை தொடருந்தில் இருந்து கீழே தள்ளி விழுத்திய அதிகாரி, தொடருந்துக்கு வெளியே காத்திருந்த சக காவல்துறையினரின் உதவியுடன் உடனடியாக கைது செய்தார்.
 
கைதான நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.