புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதிக்கு காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை!
மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விவகாரம் தொடர்பாக, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் வீரசுமன வீரசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்த தேங்காய் எண்ணெய் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது கண்டறியப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் என்பது நாம் நேரடியாக உட்கொள்ளும் ஒரு பண்டமாகும்.
ஆகவே, பெரும்பாலானோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான செயற்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments