யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இணையத்தளம் மற்றும் யூடியுப் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 35 வயதான பெண்ணொருவரும் 36 வயதான ஆணொருவரும் இவ்வாறு, இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த இணையத்தளம் இயங்குகின்றமை கண்டறியப்பட்டு, அந்த இடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த இடத்திலிருந்து 5 கணினிகள், 5 மடிக்கணினிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments