புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற தேங்காய் எண்ணெய் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு, நீண்ட காலம் தேவைப்படுமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு தெவையான ஆய்வு வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் மாத்திரமே காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே நாடு முழுவதிலும் சேகரிக்கப்படுகின்ற எண்ணெய் மாதிரியை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திகொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை நேற்றும் குறித்த எண்ணெய் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அஃப்லாடொக்ஸின் இரசாயனம் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 8 மெற்றிக் டன் எடைகொண்ட குறித்த எண்ணெயினை மீள ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய குறிப்பிட்டுள்ளார்.
No comments