இலங்கைக்குப் பேராபத்து : சந்திரிகா எச்சரிக்கை..!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம். இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் என்று முதலே இலங்கை அரசுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்து கொண்டு அதற்குச் சவால்விடும் வகையில் இலங்கை அரசு செயற்பட்டது. அந்தச் சவால் தவிடுபொடியாகியுள்ளது.
ராஜபக்ச அரசின் வெளிவிவகாரக் கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இது நாட்டுக்குப் பேரவமானம். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு இந்தத் தீர்மானம் சான்றாக அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.
ஏனெனில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு தட்டிக்கழிப்பதால் சர்வதேசம் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுபுறத்தில் நிரூபணமாகின்றது. இதனால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் இலங்கை மீது அதிகரிக்கும். என்ன நடந்தாலும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments