இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி
இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் 8 இலட்சத்து 94 ஆயிரத்து 53 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
No comments