9 ஆயிரத்து 740 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 740 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
அவர்களில் 693 பேர் உள்நாட்டில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ள 9,047 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலில் இருந்த 1 இலட்சத்து 33 ஆயிரத்து 465 பேரில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 725 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
2021 மார்ச் 30 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையில் 92 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் அதில் 88 ஆயிரத்து 914 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments