3.918 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்நிலையில், கடுமையான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறும் எமானுவல் மக்ரோன், 'மாபெரும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு' வழிவகுத்துள்ளமை, மருத்துவத் துறையினரால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்...
கடந்த 24 மணி நேரத்திற்குள் 368 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 89.?301 இனைத் தாண்டியுள்ளது.
இன்று 23.302 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.932.862 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 64.057 (+298) பேர் சாவடைந்துள்ளனர். மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.244 (+70) பேர் சாவடைந்துள்ளனர்
25.201 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.918 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 1.810 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் 40 பேர் உயிராபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments