படுகொலை! சந்தேக நபர் கொண்டுவந்த பை தொடர்பில் வெளியான தகவல்
ஒரு இளம் பெண் ஒருவரை கொலை செய்து, தலையில்லாத உடலை டாம் வீதியில் கைவிட்டுச் சென்ற சந்தேக நபர் கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் தோளில் சுமந்துவந்த பை எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வீட்டிற்கு அருகே பை எரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வீடு திரும்பியபோது சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையும் எரிக்கப்பட்டதாக முன்னதாக தெரியவந்தது.
எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சந்தேக நபரான பொலிஸ் உப பரிசோதகரின் வீட்டிற்கு அருகே அடுத்த சில நாட்களிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட நிலையில், தலையில்லாத சடலமாக கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து இளம் யுவதி கடந்த வாரம் மீட்கப்பட்டிருந்தார்.
குருவிட்ட தெப்பனாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தமை இன்றைய தினம் டி.என்.ஏ பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments