Header Ads

முகக்கவசங்களை மீள் சுழற்சிக்கு அனுப்பும் முயற்சி -பரிசில் புதிய திட்டம்!!

 



முகக்கவசங்கள் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சி! - பரிசில் புதிய திட்டம்!!

வீதிகளில் வீசப்படும் முகக்கவசங்களை சேகரித்து, மீள் சுழற்சிக்கு அனுப்பப்படும் முயற்சி ஒன்று பரிசில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 கொரோனா வைரஸ் காரணமாக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள், சுற்றுச்சூழல் மாசடைவை பெரிதும் பாதிக்க தொடங்கியுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளும் முந்தைய நாட்களில் எடுக்கப்பட்டுள்ளன. 

 இந்நிலையில், பரிஸ் 8 ஆம் மற்றும் 9 ஆம் வட்டார அரசு, முகக்கவசங்களை மீள் சுழற்சிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

 சேகரிக்கப்படும் முகக்கவடங்கள் 'மூல பொருட்களாக' மாற்றப்படு, மீண்டும் மீள் சுழற்சிக்கு அனுப்படுகின்றது. 

 இந்த திட்டத்தினை Versoo  நிறுவனத்துடன் இணைந்து குறித்த இரு வட்டார அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில், ஏனைய நகரங்களுக்கும் இது பரவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.