Header Ads

வெற்றியா - தோல்வியா? -ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சிக்காலம்

 


ஜனாதிபதி மக்ரோனின் ஆட்சிக்காலம் வெற்றியா - தோல்வியா? - கருத்துக்கணிப்பில் ஆச்சரிய முடிவு!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இதுவரையான ஆட்சிக்காலம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. 

 கிட்டத்தட்ட நான்கு வருடங்களை ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது ஆட்சிக்காலம் குறித்து இரண்டே பதில்கள் கொண்ட கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ‘மக்ரோனின் இதுவரையான ஆட்சி வெற்றியா தோல்வியா?’ என கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. 

 இந்த கருத்துக்கணிப்பில், அதிர்ச்சியளிக்கும் முகமாக 10 பேரில் 7 பேர் “தோல்வி” என பதிலளித்துள்ளனர். தங்களது தனிப்பட்ட உணர்வின் படி இம்மானுவல் மக்ரோன் ஒரு தோல்வியடைந்த ஆட்சியாளர் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்./ 

 Ifop-Fiducial மற்றும் Sud Radio வானொலி இணைந்து மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் 964 பேர் பங்கேற்றனர். இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ளது.   

No comments

Powered by Blogger.