Header Ads

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!


கொழும்பு-கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எனவும் இந்த விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் அதிகரித்ததால் இவ்வாறு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரேண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 19 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.