Header Ads

புர்காவை தடை செய்யும் விவகாரத்தில் தென்னாபிரிக்காவை தலையீடு செய்யுமாறு கோரிக்கை


இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.

தென்னாபிரிக்கா ஐக்கிய உலமா சபை  மற்றும் தென்னாபிரிக்கா சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ஆகியோர், குறித்த  விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை உலமா பேரவை இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, ‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான குரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் தற்போது, புர்கா தடை மற்றும் மத்ரசாக்கள் மூடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவை அனைத்தும் பெரும்பான்மையின மக்களை  திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்’ என அப்பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.