Header Ads

மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவடடத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமானமுறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக்கண்டித்து மட்டக்களப்பில் கவணஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துருவருவதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தினைக்கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமக்கு வழங்கப்பட்ட காணிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments

Powered by Blogger.