Header Ads

இல் து பிரான்சுக்குள் பயணிக்கும் A86 நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு தடை !!

 




இன்று புதன்கிழமை இல் து பிரான்சுக்குள் பயணிக்கும் A86 நெடுஞ்சாலையில் சில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
அதிக சுற்றுச்சூழல் மாசடைவு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் சில வகை வாகனங்களுக்கு விதிக்கப்படுகின்றது. Crit'air வகைக்குட்படுத்தப்பட்ட வாகனங்களில் இலக்கம் 0, 1 மற்றும் 2 ஆகிய ஒட்டிகள் (Sticker) கொண்ட வாகனங்கள் மாத்திரமே வீதியில் பயணிக்க முடியும் எனவும் இலக்கம் 3, 4 மற்றும் 5 ஆம் இலக்கங்கள் கொண்ட வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலை 5.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். 
 
வாகனங்களில் அதிகபட்ச வேகத்தில் இருந்து 20 கி.மீ வேகம் குறைக்கப்படுகின்றது. உதாரணத்துக்கு மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய வாகனம் 110 கி.மீ வேகத்திலும், 90 கி.மீ வேகம் கொண்ட வாகனம் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
• இல் து பிரான்சுக்குள் மாத்திரமே இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். 
 
• இன்று நள்ளிரவு ஒரு நாள் மாத்திரமே இந்த விதிகள் பொருந்தும். 
 
• Crit'air வகையில் 3, 4 மற்றும் 5 ஆகியவை அதிக மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்கள் ஆகும்.
 
• இன்று நாள் முழுவதும் முடிந்தவரை பொதுமக்கள் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் எனவும் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.