கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு !
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு 14, கொழும்பு 9, அலவத்துகொட மற்றும் நுகேகொட ஆகியப் பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
74, 57 மற்றும் 23 வயதுடைய ஆண்கள் மூவரும் 77 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 457 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 960 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், கொரோனா தொற்று சந்தேகத்தில் 609 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments