இல்-து-பிரான்சிற்குள் பகுதி நேர உள்ளிருப்பு?
நாளைய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர், இல்-து-பிரான்சிற்குள் பகுதி நேர உள்ளிருப்பு, அதாவது வார இறுதி உள்ளிருப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்குப் பரிசின் சோசலிசக் கட்சியின் நகரபிதாவாகிய அன் இதால்கோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இல்-து-பிரான்சின் தலைவரும், இல்-து-பிரான்சின் போக்குவரத்துக்களின் (Île-de-France Mobilités) தலைவருமான வலரி பெக்ரெஸ் (Valérie Pécresse) நிபந்தனைகளுடன் இந்தப் பகுதி நேர உள்ளிருப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லிசேக்களில் கொரோனப் பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும், கொரோனத் தடுப்பூசிகளை விரைவுபடுத்தல் வேண்டும். அத்தியாவசிய வர்த்தக நிலையங்களின் பட்டியல் மீளமைக்கப்படல் வேண்டும் எனவும் நிபந்தனைகளை வலெரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.
No comments