இறுதிக்கட்ட தகவல்களின் படி இல் து பிரான்சுக்குள் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள்!
இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
தற்போது வெளியான இறுதிக்கட்ட தகவல்களின் படி, இல் து பிரான்சுக்குள் 1.018 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 54 பேர் புதிதாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இல் து பிரான்சுக்குள் உள்ள தீவிர சிகிச்சை கட்டில்களில் 90,8% வீதமானவை நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதிக்குள் நிலமை மேலும் மோசமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வருட ஏப்ரலில் அதிகபட்சமாக அவசர பிரிவில் 2,681பேர் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments