Header Ads

சிறிலங்காவுக்கு எதிராக Toulouseல் அணிதிரண்ட Occitanie பிராந்திய தமிழர்கள் !



சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி, தெற்கு பிரான்சின் Toulouse Occitanie பிராந்திய இளையோர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு, சிறிலங்காவினால் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கான பொருத்தமான பொறிமுறையாக காணப்படாத நிலையுள்ளது.
இந்நிலையில் தமிழர் பரப்பெங்கும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், தெற்கு பிரான்சில் (Le collectif des Tamouls de l'Occitanie) இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.
2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.
பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.
3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச் சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஆகிய மூன்று நிலைப்பாடுகளை முகன்மை நாடுகள் தமது புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும்.
இதேவேளை கீழ் வரும் விடயங்களை சிறிலங்கா தொடர்பில் கவனத்தில் எடுக்க வேண்டுமென சர்வதேச நாடுகளை வலியுறுத்தப்பட்டது.
1) இனவழிப்புக் குற்றத்தைத் தடுத்தலும் தண்டித்தலும் பற்றிய உடன்படிக்கையின் கீழ், சிறிலங்கா அரசுக்கு எதிராக அனைத்துலகக் நீதிமன்றத்தில் ஒரு பொறுப்புக்கூறல் செயல்வழியை (சட்ட நடவடிக்கைகள்) நாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தொடர வேண்டும்.
2) சர்வதேச குற்றங்கள் தொடர்பில், அதாவது இனவழிப்பு, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பிலான உரிமையியல் (சிவில்) வழக்கு நடவடிக்கையிலும், நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தில் இருந்து வெளி அரசுகளுக்கு இறைமையின் அடிப்பமையிலன விதிவிக்கு (sovereign immunity ) சட்டக்காப்பு கிடையாது என்பதை உட்படுத்தி தங்களுடைய உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்.
3) சர்வதேச குற்றங்கள் புரிந்த அரசியல், இராணுவதளபதிகளுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும்


No comments

Powered by Blogger.