தலைநகர் பரிசில் களமிறக்கப்பட்டுள்ள 3 600 காவல்துறையினர் !!
இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறி பொழுதினைபோக்க ஒன்றுகூடுபவர்களை கண்காணிக்க 3600 காவல்துறையினர் தலைநகர் பரிசில் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளியிடங்களில் பொழுதினை மதுவுடன் கழிக்கும் பொருட்டு ஒன்றுகூடுபவர்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் குறிப்பிட்ட சில வீதிகளில் மதுபாவனை தடைசெய்யப்பட்டிருந்ததோடு, அத்தடை உத்தரவு உரியமுறையில் பொதுமக்களால் பேணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments