Header Ads

La Défense பகுதியில் ஒரு பெண் பாரஊர்தியால் மோதிப் படுகொலை!!

மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று பரிசிற்கு அருகில் La Défense பகுதியில் நடந்தேறி உள்ளது.

 
La Défense இன் சர்வதேச வர்த்தகப் பகுதிகளின் நடுவில், ஒரு சிறு சேவைப் பாரஊர்தியால், ஒரு பெண் மோதிக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 
 
இந்தப்படுகொலை நடப்பதற்குச் சிறிது முன்னர், அங்கிருந்து துப்பரவுச் சேவைப் பகுதியில் இந்தச் சிறு பார ஊர்தி களவாடப்பட்டிருந்தது.
 
கொலையாளி உடனடியாக அங்கிருந்து தப்பியோடி RER A யின் தண்டவாளத்தில் பாய்ந்தபோது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
 
கொலையாளி அந்த இடத்தில் வீதிகளில் வசிக்கும் வீடற்ற நபர் (SDF) என்றும், கொலையுண்ட பெண்மணியுடனும் மற்றைய நபருடனும் இருந்த முன்கோபத்தினால்,  திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்துள்ளான் என்றும், காவற்துறையினரின் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைப் படையணியினர் (compagnie de sécurisation et d'intervention - CSI) தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.