Header Ads

பிரான்சிற்குள் நுழைபவர்கள் அத்தியாவசியக் காரணங்களிற்காக மட்டுமே நுழைய முடியும்!!

 பிரான்சிற்குள் வான் வழியாகவே கப்பல் மூலமாகவோ நுழைபவர்கள் மிகவும் அத்தியாவசியக் காரணங்களிற்காக மட்டுமே நுழைய முடியும்.

 
இன்று இப்படி பிரான்சிற்குள் ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு தம்பதியினர் எல்லைக் காவற்படையினரிடம் சிக்கி உள்ளனர்.
 
ஒரு பிரெஞ்சுப் பிரஜையும் அவரது கனடிய துணைவியும், பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான Pointe-à-Pitre இலிருந்து இன்று ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, அவர்கள் பிரான்சிற்குள் நுழையும் காரணம் விசாரிக்கப்பட்டது.
 
தாங்கள் வீடு ஒன்று வாங்கியிருப்பதாகவும், அதனைப் பதிவு செய்வதற்காக வந்திருப்பதாகவும், வீடு வாங்குவதற்கான ஆவணங்களையும் நொத்தாரிசிடம் வீடு பதிவு செய்வதற்கான அத்தாட்சிப் பத்திரங்களையும் வழங்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் கனடாவில் டொரொன்டோ நகரில் வசிப்வர்கள்.
 
 
இவர்களை விசாரித்த, குடிவரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த எல்லைக் காவற்படையான PAF (police aux frontières) அதிகாரி, இவர்களின் பதில்களில் சந்தேகம் ஏற்பட்டதால், நொத்தாரிசு அலுவலகத்தை (office notarial) அழைத்து விசாரித்துள்ளனர்.
 
இவர்கள் கொடுத்த பத்திரத்தின் படி அதே வீடு இவர்கள் குறிப்பட்ட திகதியில் விற்பனை ஒப்பந்தம் முடிக்கப்பட உள்ளமை தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை வாங்கும் தம்பதியினர் இவர்களல்ல, வேறு பெயருள்ளவர்கள் என்ற தகவல் பெறப்பட்டது.
 
உடனடியாக இவர்களை மடக்கிய காவற்துறையினர், காவலில் வைத்துள்னளர். இவர்கள் மீண்டும் கனடாவிற்குத் திருப்பியனுப்பப்பட உள்ளனர். இவர்களிற்கான குற்றப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.