Header Ads

போதுமடா சாமி.......உணவகத்தை இழுத்து மூடிய முதலாளி !!



மூன்று முறை களவு, ஒரு மழைவெள்ளம் புகுந்த சேதம், கொரோனா நெருக்கடி, இதில் ஓம்போர்தே (en emporter) முறையில் உணவு வழங்கப்பட்டதற்கான 15 நாட்களுக்கு உணவகத்தை மூடுமாறு பணிக்கப்பட்டதோடு தண்டமும் அறவிடப்பட்ட நிலையில், இந்த தொழிலே போதுமடா சாமி....உணவகத்தை இன்றே இழுத்து மூடுகின்றேன் என பரிஸ் 13ம் வட்டாரத்தில் இருக்கின்ற La Halte des taxis உணவக முதலாளி அறிவித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு பின்னரான ஊடரங்கு வேளையில் உணவகத்தில் நேரடியாக உணவு விற்பதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தவறுதலாக கடைப்பிடிக்காத நிலையில், 15 நாட்களுக்கு உணவகம் மூடப்பட வேண்டும் என்பதோடு, காவல்துறையினரால் தண்டமும் அறவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவகத் தொழிலில் தான் சந்தித்த நெருக்கடிகளை பட்டியலிட்டு இன்றோடு உணவகத்தை இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளார்.
அரசாங்கதினால் வழங்கப்படுகின்ற தொழில் ஊக்கத்தொகையோ எதுவும் வேண்டாம் எனவும் தனது நிலைப்பாட்டை அறிவித்து அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இதேவேளை மாலை 8 மணிக்கு பின்னராக ஊரடங்க வேளையில் அங்காடியொன்றில் இருந்து 6 மணி 5 நிமிடத்துக்கு வெளியேறிய ஒருவருக்கு 135 யுறோக்கள் தண்டத்தினை அறவிட்டு பரிஸ் காவல்துறை தனது கடமையுணர்ச்சியை வெளிப்படுத்திய சம்பவமும் பிரென்சு ஊடகங்களில் மெய்ச்சப்படுகின்றது.

No comments

Powered by Blogger.