Header Ads

காப்புறுதி துறையில் உச்ச சாதனை படைத்த வவுனியா இளைஞன்!



ஆயுள் காப்புறுதி துறையின் உச்ச இலக்குகளான “MDRT”, “COT” ஆகிய இலக்குகளை அடைந்து வெற்றிபெற்ற ஆர்ப்பிக்கோ காப்புறுதி கம்பெனியின் (ARPICO INSURANCE PLC) வவுனியா கிளையை சேர்ந்த ச. துவாரகன் அவர்களுக்கு இன்று 12-02-2021 வவுனியாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி துறையில் வளர்ந்துவரும் முன்னணி நிறுவனமான ஆர்ப்பிக்கோ காப்புறுதி நிறுவனத்தின் அகில இலங்கை ரீதியில் முதல் முறையாக 2020 நிதி ஆண்டில் 13.4 மில்லியன் வியாபார இலக்கை அடைந்து “COT” எனும் உயரிய இலக்கை அடைந்த துவாரகனுடன் “MDRT” இலக்கை அடைந்த வடக்கு வலயத்தை சேர்ந்த மேலும் 11 பேரும் இன்று கௌரவிக்கப்பட்டு குறித்த வெற்றியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில் குறித்த நிறுவனத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வெற்றியாளர்கள் அனைவரும் இவ்வாண்டின் யூன் மாதம் 22 முதல் 26 ம் திகதி வரை ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறும் விசேட மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் வரவேற்பு நிகழ்வில் நிறுவனத்தின் வடக்கு வலயத்திற்கு பொறுப்பான உதவிப் பொது முகாமையாளர் திரு ப.வனோஜன், பிராந்திய முகாமையாளர் சஜீந்தன் உள்ளிட்ட பிராந்திய முகாமையாளர்கள் , விற்பனை முகாமையாளர்கள் , ஆர்ப்பிக்கோ காப்புறுதி நிறுவனத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.