இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பிரபல போதைப்பொருள் வர்த்தகரான சிவா எனப்படும் நந்தகுமாரின் மனைவி ஹெரோயின் ரக போதைப்பொருள் கடத்த முயற்சி செய்துள்ளார்.
குறித்த பெண் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தலாஹேன பகுதியில் வைத்து 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய பொலனறுவை பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
No comments