Header Ads

போலி கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

 


சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்ற குழுக்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த கும்பல் போலி கொரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடத்தியதாகவும் தெரிகிறது.

தடுப்பூசி தொடர்பான குற்றங்களை தடுப்பதற்காக சீனா அமைத்துள்ள சிறப்பு பொலிஸ் படை தலைநகர் பீஜிங் மற்றும் கிழக்கு மாகாணங்களான ஜியாங்சு மற்றும் ஷான்டாங்கில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலியான கொரோனா தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்’ நிறுவனத்தின் இரு வெவ்வேறு பிரிவுகள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.