Header Ads

அகதிகள் வரவேற்பு முகாம் ஒன்றின் நிர்வாகி கத்திக்குத்து தாக்குதலில் சாவடைந்துள்ளார்.

 


அகதிகள் வரவேற்பு முகாம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 

 
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை  Pau (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. காலை 11 மணி அளவில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். இங்குள்ள அகதிகள் வர்வேற்று முகாம் ஒன்றின் வரவேற்பாளர் மற்றும் நிர்வாகியாக கடமையாற்றிக்கொண்டிருந்த 46 வயதுடைய ஒருவர் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் 38 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்த அகதி எனவும், அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
பலத்த காயமடைந்த நிர்வாகி, முதலுதவி சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். 
 
இத்தாக்குதல் தொடர்பாக Pau நகர முதல்வர் François Bayrou, கருத்து எதுவும் கூற மறுத்துள்ளார். 
 

No comments

Powered by Blogger.