பிரான்ஸ் லாச்சப்பல் சம்பவம் தொடர்பில் காவல்துறை வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் !!
பிரான்ஸ் தமிழர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையமொன்றில் மீட்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் Préfecture de Police காவல்துறை ஒளிப்படங்கள் சிலவற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
சட்டத்துக்கு புறம்பாக வேலையாட்களை வைத்திருப்பது தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, காவல்துறையினர் எதிர்பார்க்காத விடயங்கள் அங்கு கிடைக்கப்பெற்றதாக குறிக்கப்பட்டுள்ளது.
மீடகப்பட்ட பொருட்களுக்கான சட்டரீதியாக நிறுவன உரிமையாளரினால் பொறுப்புக்கூற முடியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறை செய்திக்குறிப்பானது, தொடர்ந்து விசாரணை வலயத்துக்குள் அவர் வைக்கப்பட்டுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக வெளியிடப்பட்டுள்ளது.


No comments