Header Ads

லாச்சப்பல் பகுதியில் சுருதி போட்டோ உரிமையாளர் கைது புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு






 கடந்த வாரம் பாரிசு லாச்சப்பல் பகுதியில் சில நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் காவல்துறையினாரால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு 17.02.2021 அன்று சுருதி போட்டோ நிறுவனத்திலும் காவல்துறையினர் சோதனைகளை மேற் கொண்டனர்.

அது அவர்களின் வேலை அல்லது அவர்களுக்கான கடமை. அனால் அங்கு சோதனை செய்யப்பட்ட பின்பு அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தை பற்றி பிரான்சில் உள்ள ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான திரிவு படுத்தியசெய்திகளை வெளியிட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சுருதி நிறுவனத்துக்குள் என்ன நடக்கின்றது என்பதை இந்த நாட்டு காவல்துறை தான் பார்க்க வேண்டும். அனால் பிரெஞ்சு ஊடகத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகள் ரத்தினகற்கள் 125ஆயிரம் யூரோக்கள் ஆகியவை எங்கு போய் சேர இருந்தன என்று பொலிசார் அந்த நிறுவன உரிமையாளரிடம் விசாரிப்பதாகவும் தங்களின் தகவல்படி அந்த நிறுவனர் புலிகளுக்கு நெருக்கமானவர் என்றும் ஆதலால் இவர் புலிகளுக்கு நிதி சேகரிப்பவராக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறிலங்கா தமிழர் என்றும் சொல்கின்றார்கள். அங்கு இவ்வளவு விடயத்தை கண்டு பிடித்த காவல்துறை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியன் என்பதையும் அவர் சிறிலங்கா என்று சொல்லி தனது பதிவை பிரான்சில் பதிவு செய்து வாழ்ந்து வருகின்றார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அவரை இலங்கை தமிழர் என்றும் கூறுகின்றார்கள்.
அதைவிட இந்த சுருதி முரளி என்பவர் விடுதலைப்புலிகளுக்கு எப்பவும் எதிர்பை தான் காட்டி வாழ்ந்து வந்தவர் என்பதை நான் நேரில் வர்த்தக சங்க சந்திப்பில் கண்டேன் அனால் அவர் பதுக்கி வைத்திருந்த சொத்துக்கள் பிடிபட்டால் அது எமது இனத்தின் விடுதலைக்கா போராடிய புலிகளுக்கு என்று சொல்கிறார்கள்.
இங்கு ஒரு இனம் பாதிக்கப்டுகின்றது அனால் இலங்கை இந்திய வர்த்தக சங்கம் என்று இருப்பவர்களின் எதிர் நடவடிக்கை என்ன ?
இந்த ஊடகங்களுக்கு அவர்கள் தவறான செய்தியினை பரப்புகிறார்கள் என்று ஏன் இவர்களால் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க கூடாது!
அல்லது கைது செய்யப்பட்டவர் வர்ததக சங்கத்திற்குள் இருப்பதால் சில வேளை வர்த்தக சங்கம் மௌனம் காக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்தது லாசப்பல் பகுதியில் குடியிருப்போர் உருவாக்கியிருக்கும் (Demain la chapelle) சங்கத்திற்கு வர்த்தகர்கள் நீங்கள் பயப்பிடுகிறீர்கள் என்றால் இந்த தமிழீழனம் இன்னும் இழி நிலையில் தான் செல்லும்.
லாசப்பல் பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் இருக்கும் அதே உரிமை தான் எமக்கும் உள்ளது.
எனவே எங்களது வரலாற்றை விற்று தான் அங்கு நாம் வாழ வேண்டிய தேவை எமக்கு எப்பவும் இல்லை.
கடந்த முறையும் மாவீரர் நாளில் (2020) காவல்துறை பெரிய நாடகம் நடத்தி முடித்தார்கள் படங்களை கிழிக்க வைத்ததும் அங்கு உள்ள சில வர்த்தகர்களை வைத்தே செய்தார்கள்.
பின்பு 3 நாட்களின் பின்பு அதே இடத்தில் தலைவரின் பிறந்தநாள் மாவீரர் நாள் தலைவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன எனவே எமது இனத்தை மற்றய சமுகத்திடம் கெட்ட இனமாக கொண்டு சேர்க்க சில ஊடகங்கள் அதில் பணியாற்றும் சில நபர்கள் கொடுக்கும் தவறான தகவல்களை வைத்து எமது இனத்திற்கு இவர்கள் இந்த கெட்ட பெயரை வாங்கி தர முயற்சி செய்கிறார்கள்.
17.02.2021ம் அன்று நடந்த சோதனையில் எடுக்கப்பட்ட சொத்துக்களுக்கும் அந்த நிறுவன முதலாளிக்கும் இலங்கை தமிழினத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது ? ஏன் ஊடகங்கள் தமிழ் புலிகளுக்கு வேண்டப்பட்டவர் என்று முத்திரை குத்த வருகின்றது என்பதை இங்கு வாழும் இளம் தலைமுறையான நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி இப்படி தவறான செய்திகளை ஏன் பரப்புகின்றீர்கள் என்று எமது இளையோர் கேட்க தொடங்குங்கள்.
அப்போது அவர்களுக்கும் இதில் தவறான விடயம் உள்ளது என்பதனை அந்த ஊடக பொறுப்பு நிலை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்
எமது இனத்தின் உன்னத தியாகத்தை எமது இனத்தின் உன்னத வரலாற்றை இப்படி பட்டவர்களால் இந்த பிரான்சு தேச வாழ் பல்லின மக்கள் தவறாக புரிந்து கொள்ளாமல் எமது நியாயத்தை
அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
contact@demainlachapelle.fr
(இதில் நான் தெளிவாக படத்துடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தமிழ்புலிகளுக்கும் சம்மந்தம் இல்லை
சொல்லிவிட்டேன் .அனால் ஏன் படம் போட்டிங்கள் ஏன் செய்தி போட்டிங்கள் என்று யாராவது வாராமல் உங்கட வழமையான வேலையை (லாசப்பலில் உள்ளவர்கள்) காவல்துறைக்கு கொண்டு போங்கோ இல்ல உங்களுக்கு தெரிந்த பின்னால் குத்துற விளையாட்டுகளை காட்டுங்கோ) நன்றி

லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது.

https://www.lepoint.fr/faits-divers/paris-une-fonderie-d-or-clandestine-decouverte-par-la-police-18-02-2021-2414573_2627.php

தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காhவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்டுள்ள , குறித்த நபர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், இலங்கையின் பிரிவினைவாத செயற்பாடுகளுக்காக அந்த அமைப்புக்கான பண சேகரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ள விடயம் தமிழ்உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ‘விடுதலைப்புலிகளுக்கு எப்பவும் எதிர்பை தான் காட்டி வாழ்ந்து வந்தவர் என்பதை நான் நேரில் வர்த்தக சங்க சந்திப்பில் கண்டேன்’ புலிகளின் குரல் முரளி தனது சமூகவலைத்தள பதிவில் இடித்துரைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வது காவல்துறை, நீதித்துறையின் கடமை. ஆனால் குறித்த சம்பவத்துடன் விடுதலைப்புலிகளை தொடர்படுத்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமைக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்காலம் என சந்தேகத்தினை எழுப்பியுள்ள சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகிந்தன், இது தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

தமிழினப்படுகொலைக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையளரது அறிக்கை, பல பிரென்சு ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில், இவ்வாறான செய்திகளை அதனை திசை திருப்புவதாக உள்ளதெனவும் மகிந்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தி தொட்பல் ஊடகத்துக்கு தமது எதிர்வினைகளை இளையோர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். எதிர்வினையாற்ற விரும்புவோர் குறித்த இந்த https://www.europe1.fr/formulaire/contact , https://www.leparisien.fr/contact/ மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தலாம்.


No comments

Powered by Blogger.