Header Ads

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவோம் - - மக்ரோன்



பிராங்கோ-அமெரிக்க (Franco-American) கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக இறங்கியிருப் பதை வரவேற்றுள்ள அதிபர் மக்ரோன், பெருமைப்படக் கூடிய அற்புதமான ஒரு குழுச் செயற்பாடு ("magnificent teamwork") அது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்றிரவு பாரிஸ் நகரில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சிக் கற்கைகள் நிலையத்தில் (Centre national d’études spatiales-Cnes) இருந்தவாறு விண்கலம் தரை இறங்குவதை அவதானித்த மக்ரோன் அதன் பிறகு அங்கு உற்சாகத் துடன் திரண்டிருந்த அறிவியலாளர் களை நேரில் பாராட்டினார்.
ஆகப் பிந்திய நவீன தொழில் நுட்பக் கருவிகளுடன் கூடிய நாஸாவின் "விடாமுயற்சி" (Perseverance) விண்கலம்
அமெரிக்க - பிரான்ஸ் கூட்டு அறிவியல் முயற்சியால் வடிவமைக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன நுண் கமெராக்கள்(SuperCam) பிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் வானியற்பியல் மற்றும் கோள்கள் ஆராய்ச்சி மையத்தில்(Research Institute in Astrophysics and Planetology - IRAP) தயாரிக்கப்பட்டவை. செவ்வாயின் மலைப்பகுதிகளில் மண் மாதிரிகளை அகழ்ந்து சேமிப்பதற்காக 'சுவிஸ் கத்தி' பாணியில் உருவாக்கப்பட்ட துளை கருவிகளும் மலைப்பகுதிகளை ஒலி மற்றும் ஒளி மூலமாக லேஸர் ஆய்வு செய்கின்ற நுண் கருவிகளும் பிரான்ஸிலேயே தயாரிக்கப்பட்டு விண்கலத்தில் பொருத்தப்பட்டன.
வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.பண்டைய உயிர்வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பிவைக்கும்.
செவ்வாய்க் கோளில் மனித உயிரின் தடங்களைத் தேடும் முயற்சியில் ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன நான்கு ஆய்வு விண்கலங்களை அங்கு அனுப்பியுள் ளன. "விடாமுயற்சி" என்னும் இந்த ரோவர் தானியங்கி கலம் ஐந்தாவது ஆகும். அதி நவீன தொழில் நுட்பங்களுடன் பறந்து ஆய்வுகளைச் செய்ய வல்ல நுண்ணறிவு மிக்க மினி ட்ரோன் ஹெலி ஒன்றும் இதில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புகின்ற செயற்றிட் டத்தின் முன்னோடிப் பறப்பு முயற்சியா கவும் இது அமைகின்றது.

No comments

Powered by Blogger.